#PBKSvRR: டாஸ் வென்று பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. பிளேயிங் லெவன் இதோ!
ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 52-வது லீக் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 51 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிகளும் 10 போட்டிகள் கடந்து விளையாடி வருகிறது.
வார இறுதி நாட்களில் சுவாரஸ்யத்தை கூட்ட இரண்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளும், மாலையில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன. அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 5ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இப்போட்டி முக்கிய வாய்ந்தவையாக இருப்பதால் அனல் பறக்கும் ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (w/c), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.