#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 48-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பைர்ஸ்டோவ் – ஷிகர் தவான் களமிறங்கினார்கள்.
இதில் ஜானி பைரஸ்ட்டோவ் ஒரே ஒரு ரன் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, ராஜபக்ஷே களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது. இதில் 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ராஜபக்ஷே வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய லிவிங்ஸ்டன், 10 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என மொத்தம் 30 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக தவான் 53 பந்துகளில் 62 ரன்கள் குவித்துள்ளார்.