#PBKSvRCB: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா பெங்களூர்? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இவ்விரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து காணலாம்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை பஞ்சாப் – பெங்களூர் அணி 24 போட்டிகள் நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் 12 போட்டியில் பெங்களூர் அணியும், 14 போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை 6 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் அணியை பொறுத்தளவில், பேட்டிங்கில் சரிவாகவே உள்ளது. தொடக்கத்தில் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடிவந்தாலும், அவரையடுத்து களமிறங்கும் வீரர்கள் விளையாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக, அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 2 போட்டிகளில் மட்டும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இன்றைய அவரின் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

மேலும், நடப்பாண்டில் நிகோலஸ் பூரனு பார்மில் உள்ளதால், இன்றைய போட்டியில் அவருக்கு பதில் டேவிட் மலானை களமிறக்கினால், பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் சற்று ஆறுதலாக இருக்கும். பந்துவீச்சில் அர்ஷ்தீப் மட்டும் அதிரடியாக பந்துவீசி விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். ஆனால் ஷமி, அந்தளவு இன்னும் சிறப்பாக ஆடவில்லை.

எதிர்பார்க்கப்படும் XI:

கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், டேவிட் மாலன் / நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், கிறிஸ் ஜோர்டான் / ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

பெங்களூர் அணியை பொறுத்தளவில, பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் சிறப்பாக உள்ளது. படிக்கல் அதிரடியாக தொடக்கத்தை கொடுத்து வரும் அதே சமயத்தில் அவருக்கு பின் டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி வருகிறார். கோலி சற்று சறுக்கினாலும், மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடிவருகிறார். பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் பயங்கர பார்மில் இருந்து வரும் அதே சமயத்தில், முகமத் சிராஜ் அவருடன் இணைந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.

எதிர்பார்க்கப்படும் XI:

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதர், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்