PBKS VS MI : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் தேர்வு.!

மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 46-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா மைதானத்தில் மோதுகின்றன.
இந்நிலையில், இன்றயை போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி முதலில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்கிறது.
மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் XI):
ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்
பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் XI):
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(C), மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(W), சாம் குரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
மேலும், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 7-வது இடத்திலும் இருக்கிறது. ஏற்கனவே, இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025