PBKS vs LSG: டாஸ் வென்றது பஞ்சாப் அணி; லக்னோ முதலில் பேட்டிங்.!
ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs LSG போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பஞ்சாபில் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஐபிஎல் இல் இரு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி, 4-வது இடத்திலும் மற்றும் பஞ்சாப் அணி 6-வது இடத்திலும் இருக்கின்றன.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கிற்கு தற்போது லியாம் லிவிங்ஸ்டன் மேலும் வலு சேர்க்கிறார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம வலிமையுடன் இருக்கும் பஞ்சாப் அணி இன்று தவான் தலைமையில் களமிறங்குகிறது.
லக்னோ அணியைப் பொறுத்தவரை குஜராத் அணியுடன் விளையாடிய கடைசி போட்டியில், இறுதி வரை சென்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வெல்லும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.