#IPL2022: இரண்டாம் தோல்வியை சந்திக்கவுள்ளதா குஜராத்? பஞ்சாப் அணிக்கு 144 ரன்கள் இலக்கு!
இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 48-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமன் சஹா – ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். 9 ரன்கள் எடுத்து ஷுப்மன் கில் ரன் அவுட் ஆக, சாய் சுதர்சன் களமிறங்கினார்.
மறுமுனையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 1 ரன் எடுத்தும், டேவிட் மில்லர், ராகுல் தேவாதியா 11 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். பின்னர் சிறப்பாக ஆடிவந்த சாய் சுதர்சன் கடைசிவரை தனது விக்கெட்டை இழக்காமல் 50 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி முக்கியமான போட்டி என்பதால் வெற்றிபெறும் நோக்குடன் அதிரடியாக பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.