IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..!
IPL 2024 : இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேச அணியோடு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்று பயணத்தில் டி20 தொடரின் 2-வது போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரரான மதிஷா பத்திரானாவிற்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த டி20 தொடரிலிருந்து வெளியேறி உள்ளார்.
Read More :- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை! லட்சங்களை அள்ளி கொடுக்கும் பிசிசிஐ!!
இலங்கை மற்றும் வங்கதேசதுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரானது தற்போது சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில், பத்திரனா தொடரிலிருந்து வெளியேறி உள்ளார். இது இலங்கை அணிக்கு பெரிய இடியாக கடைசி டி20 போட்டியில் அமைந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் சிறுது நாட்களே இருப்பதால் சென்னை அணிக்காக இவர் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் பத்திரானாவுக்கு ஏற்பட்ட காயத்தை பற்றி கூறுகையில், பத்திரனாவிற்கு தொடையில் ஏற்பட்ட காயம் சரி ஆவதற்கு இன்னும் நான்கு முதல் ஏழு வாரங்கள் ஆகும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஒரு சில சென்னை போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாது என தெரிகிறது.
Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரை நேசிப்பதற்கு இதுதான் காரணம் ..! மனம் திறந்த விராட் கோலி ..!
இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், ஏன் என்றால் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக வெளியேறி கொண்டே இருகின்றனர். இதற்கு முன்பு, நியூஸிலாந்து அணியின் டேவன் கான்வேக்கு இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ள நிலையில் தற்போது, பத்திரனாவின் காயமும் சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.