ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின், டெல்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது, மேலும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது குடும்ப பிரச்சனை காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து நாடு திரும்பினார். மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் மார்ச்-1இல் தொடங்குவதற்கு இன்னும் 9 நாட்கள் இடைவெளி இருப்பதால் அதற்கு முன் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்மின்ஸ் வராத நிலையில், துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது, 2021இல் பேட் கம்மின்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து, அவர் இல்லாத போது இரண்டு முறை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்துள்ளார். 3-வது போட்டியில் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் வெளியேறிய நிலையில் அவரின் நிலையம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…