உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! பாட் கம்மின்ஸ்
இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் ஆனது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் ஒன்றிலும் கூடத் தோல்வியடையாத இந்தியா அணி, எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி (54), ஜடேஜா என அடுத்தடுத்து அவுட் ஆகினார்கள். இதனால் மைதானமே அமைதியில் ஆழ்ந்தது. கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி, 66 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவை வீழ்த்தி… 6-வது முறையாக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலியா ..!
முடிவில் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் இந்திய அணி எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து 137 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்னஸ் லாபுசாக்னே அரைசதம் கடக்க, இறுதியில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்று, 6வது முறையாக சாதனை படைத்தது.
போட்டி முடிந்த நிலையில் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ். ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம் என்று நினைப்பதாகக் கூறினார். அவர் கூறியதாவது. “இந்தியாவில் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம். அனைவருக்கும் இது ஒரு பெரிய ஆண்டு. எங்கள் கிரிக்கெட் அணி ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது.” எனக் கூறினார்.
முன்னதாக பெரிய கூட்டத்தை ஆர்ப்பரிப்பின்றி அமைதிப்படுத்துவதுதான் தங்களின் அடுத்த இலக்கு என்று பேசியிருந்தார். அதை போலவே 29வது ஓவரில் விராட் கோலியை அவுட் ஆக்கி, மைதானத்தை அமைதிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “கடைசியாக எங்களால் முடிந்த வரை ரன்கள் எடுத்தோம். இந்திய அணி இலக்காக 240 ஆக வைத்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் இதயம் படபடத்தது.”
முதலில் 1,30,000 ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம்- பேட் கம்மின்ஸ்..!
“அந்த நேரத்தில் ஹெட் ஆட்டத்தை எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தனர். இதே ஆக்ரோஷம் அனைவரிடத்திலும் காணப்பட்டது. இதனால் போட்டியில் வெற்றி பெற்றோம். இந்த 2023ம் ஆண்டு நீண்ட, நீண்ட காலமாக அனைவரது மனதிலும் நினைவில் இருக்கும். இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் நம்பமுடியாதது. அதை எதுவும் ஈடுசெய்ய முடியாது.” என்று பாட் கம்மின்ஸ் கூறினார்.