#BREAKING: இன்றைய போட்டியில் பாட் கம்மின்ஸ் நீக்கம்; கேப்டனாக ஸ்மித்..!
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றபோது அங்கு உணவாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பாட் கம்மின்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்தததால் பாட் கம்மின்ஸ் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளப்பட்டதில் அதில் நெகடிவ் முடிவு வந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், ஸ்மித் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2018 டெஸ்டுக்குப் பிறகு ஸ்மித் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.
டிராவிஸ் ஹெட் துணைக் கேப்டனாக இருப்பார். மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நெசர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடவில்லை.
Australian captain Pat Cummins has been deemed a close contact of a person who received a positive Covid-19 test last night and is unavailable to play in the second Vodafone #Ashes Test.
We anticipate that he will be available to play in the third Test at the MCG in Melbourne. pic.twitter.com/o6JxIdL9pn
— Cricket Australia (@CricketAus) December 16, 2021