ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக, பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச், கடந்த மாதம் ஓய்வு முடிவை அறிவித்த பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஒருநாள் போட்டி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு நிர்வாகம் கம்மின்ஸை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமித்துள்ளது.
கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணியின் 27 ஆவது ஒருநாள் கேப்டன் ஆகிறார், மேலும் ஆஸ்திரேலிய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் இவர்தான். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்துவார் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அனுபவம் வாய்ந்த டேவிட் வார்னருக்கு, வாழ்நாள் கேப்டன் தடை நீடிப்பதால் அவர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பை இழக்கிறார், இதனால் கம்மின்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கம்மின்ஸ், இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் 119 விக்கெட்கள் எடுத்துள்ளார். சராசரி-28.04 (சிறந்த பௌலிங்- 5/70)
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…