ஆஸ்திரேலிய அணியின் 27ஆவது ஒருநாள் போட்டி கேப்டன் ஆகிறார் பேட் கம்மின்ஸ்.!

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக, பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச், கடந்த மாதம் ஓய்வு முடிவை அறிவித்த பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஒருநாள் போட்டி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு நிர்வாகம் கம்மின்ஸை ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக நியமித்துள்ளது.

கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணியின் 27 ஆவது ஒருநாள்  கேப்டன் ஆகிறார், மேலும் ஆஸ்திரேலிய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் இவர்தான். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்துவார் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அனுபவம் வாய்ந்த டேவிட் வார்னருக்கு, வாழ்நாள் கேப்டன் தடை நீடிப்பதால் அவர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பை இழக்கிறார், இதனால் கம்மின்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கம்மின்ஸ், இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் 119 விக்கெட்கள் எடுத்துள்ளார். சராசரி-28.04 (சிறந்த பௌலிங்- 5/70)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்