ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை உடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிகவும் திணறியது. அதிலும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சிவம் துபே அவுட் ஆகி வெளியேறிவுடன் ஜடேஜா களமிறங்கினார்.
ஜடேஜாவும், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறிய விளையாடி கொண்டிருந்தார். அப்போது முதல் இன்னிங்ஸ் இறுதி கட்டத்தை நெருங்கும் பொழுது டெத் ஓவரின் 19-வது ஓவரை வீசுவதற்கு புவனேஸ்வர் குமார் வந்தார். அவரை எதிர்கொண்ட ஜடேஜா அந்த ஓவரில் அவர் வீசிய ஒரு பந்தை அடிக்க முயற்சி செய்வார். ஆனால் அந்த பந்து சரியாக பேட்டில் படாமல் அங்கயே இருக்கும்.
ஆனால், ஜடேஜாவிற்கு பந்து எங்கு சென்றது என்று தெரியாமல் ரன் எடுக்க ஓட்டம் எடுப்பர், அப்போது அந்த பந்தை வீசிய புவனேஸ்வர் குமார் அந்த பந்தை கையில் பிடித்து ரன் அவுட் செய்ய ஸ்டம்பில் வீசுவார். அப்போது ஜடேஜா ரன் அவுட் ஆகி விடுவோம் என்று திரும்பி கிரீஸ்கு அவரை அறியாமல் ஸ்டம்பை மறித்து ஓடுவார். அப்போது, புவி வீசிய அந்த பந்து திரும்பி கிரீஸ்ஸுக்கு ஓடிய ஜடேஜாவின் முதுகில் பட்டு வேறு பக்கம் போய்விடும்.
இதனால், பீல்டிங்கு இடையூறு செய்தது போல இருக்கிறது என்று விக்கெட் கீப்பர் கிளாஸ்ஸன் அப்பீல் கேட்குமாறு புவியிடம் சைகை செய்வார். கிரிக்கெட்டின் விதிப்படி பீல்டிங் செய்யும் அணிக்கு இடையிறு ஏற்படுத்தும் வகையில் களத்தில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் நடந்து கொண்டால் அந்த பேட்ஸ்மேனுக்கு விக்கெட் அறிவித்து விடுவார்கள். ஆனால் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் அவர் செய்த அந்த அப்பீலை நடுவரிடம் இருந்து திரும்ப பெற்று விடுவார்.
இத்தகைய செயலானது ஆட்டத்தில் அறத்துடன் விளையாடிய அணி (Fair Play Award) புள்ளிப்பட்டியலில் போனஸ் புள்ளியாக அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதற்காக பேட் கம்மின்ஸ் இதை செய்தாரா? இல்லை ஆட்டத்தில் தடுமாறி விளையாடி கொண்டிருக்கும் ஜடேஜா இதன் மூலம் ஆட்டமிழந்து விட்டால் அதன் பிறகு தோனி களமிறங்குவர் என்று நினைத்து தந்திரமாக அந்த அப்பீலை திரும்ப பெற்றாரா? என்று கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் பேட் கம்மின்ஸ்ஸிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…