தொடையில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நடத்திய உடற்பயிற்சி பரிசோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், ரோஹித் குறித்து பி.சி.சி.ஐ மற்றும் தேர்வுக் குழு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐபிஎல் 13 வது சீசனில் ரோஹித் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இருப்பினும், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 33 வயதான ரோஹித் விளையாடியது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர், பி.சி.சி.ஐ ரோஹித் சர்மாவிற்கு டிசம்பர் 11 உடற்தகுதி பரிசோதனையை நடத்தக்கூடும் என்றும் கூறியது. இப்போது, ரோஹித் உடற்பயிற்சி பரிசோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு டிசம்பர் 14 அன்று ரோஹித் சர்மாவை அனுப்பக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகள் இருப்பதால், இந்திய தொடக்க வீரர் ரோஹித் உடனடியாக அணியில் சேர முடியாது, மேலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு கட்டாயமாக செல்ல வேண்டியிருக்கும். அப்படி ரோஹித் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு சென்றால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் கலந்துகொள்ள முடியும்.
இதனால், ரோஹித் ஜனவரி 7 -ம் தேதி நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் அவர் பங்கேற்கும் முதல் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…