தரவரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா !! ஐசிசி வெளியிட்ட ரேங்கிங் பட்டியல்..!

ICC Rankiings

ஐசிசி : டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 2-ஆம் இடம் இருந்த ஹர்திக் பாண்டியா பின்னடைவை சந்தித்து தற்போது 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இதே போல பேட்டிங் தரவரிசை, பவுலிங் தரவரிசை என அனைத்து தரவரிசை பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல்களில் முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் வீரர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

டி20 பேட்டிங் தரவரிசை :

நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிதன் காரணமாக முதலிடத்தில் இருந்த சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா வீரரான டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் வந்துள்ளார்.

  1. டிராவிஸ் ஹெட் – ஆஸ்திரேலியா – 844 புள்ளிகள்
  2. சூரியகுமார் யாதவ் – இந்தியா – 797 புள்ளிகள்
  3. ஃபில் சால்ட் – இங்கிலாந்து – 797 பள்ளிகள்
  4. பாபர் அசாம் – பாகிஸ்தான் – 755 புள்ளிகள்
  5. முகமது ரிஸ்வான் – பாகிஸ்தான் – 746 புள்ளிகள்

டி20 பவுலிங் தரவரிசை :

  1. அடில் ரஷீத் – இங்கிலாந்து – 718 புள்ளிகள்
  2. அன்ரிச் நோர்ட்ஜே – தென்னாபிரிக்கா – 675 புள்ளிகள்
  3. வனிந்து ஹசரங்கா – இலங்கை – 674 புள்ளிகள்
  4. ரஷீத் கான் – ஆப்கானிஸ்தான் – 668 புள்ளிகள்
  5. ஜோஷ் ஹேஸ்ல்வுட் – ஆஸ்திரேலியா – 662 புள்ளிகள்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை :

  1. வனிந்து ஹசரங்கா – இலங்கை – 222 புள்ளிகள்
  2. மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ஆஸ்திரேலியா – 211 புள்ளிகள்
  3. சிக்கந்தர் ராசா – ஜிம்பாப்வே – 208 புள்ளிகள்
  4. ஷகிப் அல் ஹசன் – வங்கதேசம் – 206 புள்ளிகள்
  5. முகமது நபி – ஆப்கானிஸ்தான் – 205 புள்ளிகள்

அதே நேரம் இந்த பட்டியலில் 2-ஆம் இடத்தில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா இருந்து வந்தார், இவர் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணியடனான டி20 தொடரில் விளையாடாமல் போனதால் இந்த சரிவை கண்டுள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

மேலும், இலங்கை அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடி இந்த பட்டியலில் முதலிடம் வருவார் என அவரது ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்