PAKvsSA: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு.!

PAKvsSA Toss

PAKvsSA: இந்த ஆண்டிற்கான உலக்கோப்பைத் தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 26 ஆவது லீக் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளை விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. இந்த தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தனது முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 428 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 311 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 399 ரன்களும் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக 382 ரன்களும் எடுத்து வெற்றி பெற்றது. ஆனால், நெதர்லாந்துக்கு எதிராக 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 82 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அதில் 30 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு இல்லை. தற்பொழுது போட்டி தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை வெற்றி பெற்ற நான்கு போட்டிகளிலும் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியுள்ளது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது இரண்டாவதாக பேட்டிங் செய்துள்ளது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்திலும் இரண்டாவதாக பேட்டிங் செய்வதால் தென்னாப்பிரிக்கா அணி மிகவும் கவனத்துடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா:

குயின்டன் டி காக்(W), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி என்கிடி

பாகிஸ்தான்:

அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(C), முகமது ரிஸ்வான்(W), சவுத் ஷகீல், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்