#PAKvSL: குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடியான சதம்! பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிஸ்ஸங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில், குசல் பெரேரா எதிர்பாக்காத விதமாக டக் அவுட்டானார்.

இதன்பின் நிஸ்ஸங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி விக்கெட்டை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நிஸ்ஸங்கா 51 எடுத்திருந்த நிலையில், ஷதாப் கான் பந்தில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குசல் மெண்டிஸ் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை தொம்சம் செய்து தனது சத்தை அடித்து அசத்தினார். பின்னர் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து, மற்ற வீரர்கள் ஒருபக்கம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களத்தில் இருந்த சதீர சமரவிக்ரமா 82 பந்துகளில் சதம் அடித்தார். இறுதிக்கட்டத்தில் சதீர சமரவிக்ரமா 108 ரன்களில் ஹசன் அலி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ஹசன் அலி 4, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். எனவே, 345 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறக்கவுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…

16 minutes ago

நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…

41 minutes ago

“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…

41 minutes ago

தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

1 hour ago

மழையோ மழை… இன்று முதல் ஆரம்பம்.! எங்கெல்லாம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் அப்டேட்.!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…

4 hours ago