#PAKvsBAN: பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

PAK vs BAN

PAKvsBAN: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-வது லீப் போட்டியாகவும் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பல பரிட்சை செய்கின்றனர். இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதனால் நான்கு புள்ளிகள் உடன் புள்ளி விவரப்பட்டியலில் பாகிஸ்தான் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல, பங்களாதேஷ் அணி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் புள்ளி விவரப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் விளையாடியுள்ளன.

அதில் பாகிஸ்தான் அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது நேருக்குநேர் மோதியது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பைப் போட்டியில் முதல் நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும், என்பதால் வங்கதேச அணியானது அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இருந்தும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்கள் திறமையை நிரூபிக்கும் நோக்கில் வங்கதேச அணி களம் இறங்க உள்ளது.

ஆனால் பாகிஸ்தானில் ஷஹீன் ஷா அப்ரிடி போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் பாபர் அசாம் போன்ற பேட்டர்கள் இருப்பதால் இந்த போட்டியானது பங்களாதேஷ் அணிக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த நிலையில் இன்றைய போட்டியானது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பங்களாதேஷ்:

லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(C), முஷ்பிகுர் ரஹீம்(W), மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்

பாகிஸ்தான்:

அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம்(C), முகமது ரிஸ்வான்(W), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷாஹீன் அப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்