#PAKvSA : பாகிஸ்தானை ஆல் அவுட் எடுத்த தென்னாப்பிரிக்கா.. 271 ரன்கள் வெற்றி இலக்கு!

#PAKvSA

ஐசிசி ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 26-ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பலப்பரீட்சை செய்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்த சூழலில் பாகிஸ்தான் நட்சத்திர ஆட்டக்காரர்களான கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி சற்று நிதானமான ஆட்டத்தை  வந்த நிலையில், ரிஸ்வான் 31 விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

மறுபக்கம் பாபர் அசாம் தனது அரை சத்தை பூர்த்தி செய்த உடனே பெவிலியன் திரும்பினார். இருந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் அணியை அகல பாதாளத்தில் இருந்து மீட்டனர். அதில், சவுத் ஷகீல் 52 ரன்கள், ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கொரை உயர்த்தினர். இருப்பினும், இவர்கள் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் தென்னாபிரிக்க பந்துவீச்சில் சுருண்டனர்.

இறுதியாக 46.4 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 270 ரன்களை எடுத்தது. தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4, மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 என விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்