PAKvNZ : அணிக்கு மீண்டும் திரும்பிய ரச்சின் ரவீந்திரா…பிளேயிங் லெவன் இதோ!
1996 உலகக்கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் ஹோஸ்ட் செய்யும் முதல் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

கராச்சி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது . இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டியானது கராச்சி தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி (IST) மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது.
போட்டி தொடங்க இன்னும் சில நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். இந்த சூழலில், நியூசிலாந்து அணி சார்பாக விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் விவரம் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து :
தொடக்க வீரர்கள்: ரச்சின் ரவீந்திர, டெவோன் கான்வே
மிடில்-ஆர்டர்: கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம்
ஆல்-ரவுண்டர்: க்ளென் பிலிப்ஸ்
ஸ்பின்னர்கள்: மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கே)
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ’ரூர்க், மேட் ஹென்றி
அணிக்கு திரும்பிய ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, பிப்ரவரி 8, 2025 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று அணிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பந்தை பிடிக்க முயன்றபோது, தலையில் பந்து தாக்கி காயமடைந்தார். இந்தச் சம்பவம் லாகூரில் நடைபெற்றது. சம்பவத்தின் போது அவருடைய தலையில் பந்து பட்ட காரணத்தால் ரத்தம் அதிமாக கொட்டியது. உடனடியாக மைதானத்தில் இருந்தும் அவர் வெளியேறினார்.
காயத்துக்குப் பிறகு, ரவீந்திரா பல நாட்களாகத் தலைவலியை அனுபவித்தார், ஆனால் தற்போது அவர் மீண்டு, பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கியிருந்தார். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாடுவாரா என்கிற சந்தேகமும் எழுந்தது. ஆனால், தற்போது அவர் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி என கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.