PAKvBAN : பங்களாதேஷை 204 ரன்களுக்கு சுருட்டியது பாகிஸ்தான்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஓப்பனிங் இறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
#PAKvsBAN: பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!
இதன்பின் லிட்டன் தாஸ் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இப்திகார் அகமது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் தனது அரை சத்தை பூர்த்தி செய்து 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஷஹீன் அப்ரிடி பந்தில் போல்ட் ஆனார். ஆனாலும், களத்தில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தனது அனுபவத்தை பயன்படுத்தி அணிக்கு 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ் அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் தலா 3, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
எனவே, இப்போட்டியில் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, பங்களாதேஷ் அணி 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இப்போட்டிக்கு இரு அணிகளுக்கும் முக்கியம் என்று கருதப்பட்டாலும், பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025