இந்தியா -பாகிஸ்தான் இந்த பெயரை கேட்டாலே இந்தியர்கள் அனைவருக்கும் ஞாபகம் வருவது கிரிக்கெட் போட்டி தான்.ஏனென்றால் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா மட்டும் அல்லாது பிற நாட்டில் உள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.அப்படி ஒரு போட்டி தான் இந்தியா -பாகிஸ்தான் போட்டி.இந்த இந்திய அணி வெற்றி பெற்றால் அதை கொண்டாட இந்தியர்கள் தயங்கமாட்டார்கள்.அதேவேளையில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் அதை விமர்சனங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் இந்திய அணியின் வீரர்களின் உருவபொம்மையை எரிப்பது உட்பட பல விதங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில் உலக கோப்பை போட்டி என்றால் சொல்லவா வேண்டும் இந்தியர்கள் அனைவரும் நாட்டின் திருவிழா போன்று அதை கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.
அதற்கு ஏற்றவாறு இந்திய அணியும் பாகிஸ்தான் அணியுடன் உலக கோப்பை போட்டியில் சிறப்பான வரலாற்று சாதனைகளை தன்வசம் வைத்துள்ளது.50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் இந்திய அணியே அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த நடைபெறும் உலக கோப்பை போட்டியில் ஜூன் மாதம் 16 ஆம் தேதி மோதுகின்றது.இந்த போட்டியை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.
இதற்கு ஏற்றவாறு கராச்சியில் பாகிஸ்தான் கிரக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் இன்சமாம்-உல்-ஹக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர்கூறுகையில்,இந்த இரு அணிகளும் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்தியாவுடனான வெற்றியை கவுரமாக நினைக்கின்றனர். ஆனால் உலகக் கோப்பையில் ஒரு முறை கூட பாகிஸ்தான் இந்தியாவை வென்றது இல்லை.எனவே உலகக் கோப்பையில் இந்தியாவுடனான வரலாற்றை மாற்றிக்காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…