பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர்..! முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்ய வாய்ப்பு..!
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் தொடர் உடன் வெளியேறியது. இதனால் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
புதிய பயிற்சியாளர் தேடும் வேட்டையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
இந்நிலையில் மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளர் பதவிக்கு சமீபத்தில் விண்ணப்பித்துள்ளார். மேலும் கடந்த சில நாள்களுக்கு முன் கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவில் இருந்து விலகி உள்ளார் குறிப்பிடத்தக்கது.