நேபாள அணியை தோற்கடித்து பாகிஸ்தான் அமோக வெற்றி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 14-வது போட்டியாக இன்று நேபாள அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற நேபாள அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி சற்று தடுமாறி ரன்களை சேர்த்ததுடன் விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. 50 ஓவர் வரை பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்கு பிடித்து நேபாள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தனர்.
ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி ..!
அந்த அணியில் அதிக பட்சமாக பிபின் ராவல் 39 ரன்களை எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியின் அராபத் மின்ஹாஸ் 3 விக்கெட்டை கைப்பற்றினார். அதன்பின் 198 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது.
இருந்தும் அவ்வப்போது விக்கெட்டை விட்டு கொடுத்தாலும் களத்தில் நின்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி 47.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் அணி வீரரான அசான் அவாய்ஸ் 63* ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025