முத்தரப்பு ஒருநாள் தொடர் : இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
பாகிஸ்தானில் நடைபெறும் ஒருநாள் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதான மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் : 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே ஒரு முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இந்த முத்தரப்பு தொடரில், நியூசிலாந்து இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியது, இரண்டு போட்டிகளிலும், மிட்செல் சாண்ட்னரின் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதன்படி, லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா இரு அணிகளுடன் மோதி 2 ஆட்டத்திலும் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த நிலையில், கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் தற்போது நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்துள்ளது.
முதலில் பாகிஸ்தான் தரப்பில் ஃபக்கர் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பேட்டிங் செய்வதற்கு களமிறங்கி நிதானமாக விளையாடி வருகிறார்கள். நியூசிலாந்து அணி சார்பாக, ஜேக்கப் டஃபி-யை தொடர்ந்து வில்லியம் ஓரூர்க் பந்தை வீசி வருகிறார்.
பாகிஸ்தான் அணி:
கேப்டன் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியில், ஃபகார் ஜமான், பாபர் அசாம், சவுத் ஷகீல், , சல்மான் ஆகா, தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் உள்ளனர்.
நியூசிலாந்து அணி:
கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அணியில், வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓரூர்க் ஆகியோர் உள்ளனர்.