பாகிஸ்தான் அணி 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி …!டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது…!

Default Image

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார். 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள், சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடியது . மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தது. இன்று  491 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே அடித்தது.இதனால் பாகிஸ்தான் அணி 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்