IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்க்கும் நிலையில், IIT பாபாவின் கணிப்பு இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

IND vs PAK - iit baba

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது.  இந்த போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம், இந்திய அணியின் வெற்றிக்காக அனைத்து ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மறுபக்கம் கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஐஐடி பாபா இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். இது, இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது, மகா கும்பமேளாவில் பிரபலமான IIT பாபா, இந்த போட்டியில் பாகிஸ்தான் தான் வெல்லும் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார். யூடியூபருடன் உரையாடிய ஐஐடி பாபாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில் பேசிய ஐஐடி பாபா, “இந்த முறை நான் முன்கூட்டியே சொல்லிட்டேன், இந்தியா ஜெயிக்காது. விராட் கோலி தன்னால் முடிந்ததைச் செய்யலாம். வேறு யாராவது முயற்சி செய்யலாம். எல்லாரையும் முழு பலத்தோடு முயற்சி செய்யச் சொல்லுங்கள்.

என்னதான் முயற்சி செய்தாலும் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறாது. விராட் கோலியாலும் கூட இந்திய காப்பாற்ற முடியாது. இந்த முறை இந்தியா வெற்றி பெறாது என்று நான் உங்களுக்கு முன்பே சொல்கிறேன். எவ்வளவு முயற்சி செய்தாலும் தவிர்க்க முடியாத முடிவை மாற்ற முடியாது.”என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியுடன் தொடங்கியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இதற்கு முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான்இந்த இரு அணிகளும் கடைசியாக 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதியது. அப்போது பாகிஸ்தான் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி பாபா யார்?

ஐஐடி பாபாவின் உண்மையான பெயர் அபே சிங். அவர் பாம்பேயில் ஐஐடிபட்டம் பெற்ற விண்வெளி பொறியாளராக இருந்தார். அபே சிங் கனடாவில் அதிக சம்பளம் வாங்கும் வேலையைச் செய்து வந்தார், ஆனால் தனது வாழ்க்கையைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஆன்மீகப் பாதையில் இறங்கிவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்