பாகிஸ்தான் மாறவே மாட்டாங்க …! கமெண்ட்ரியில் கலாய்த்த அம்பதி ராயுடு!!
டி20I: இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது.
இந்த போட்டியில் அமெரிக்கா அணி, வலுப்பெற்ற பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. மேலும், இந்த போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா அணியின் கடுமையான போட்டி என ஒரு பக்கம் கூறினாலும் மறுபக்கம் பாகிஸ்தான் அணியின் மோசமான ஃபீல்டிங் தான் என்று கூற வேண்டும்.
பாகிஸ்தான் அணிக்கும் ஃபீல்டிங்க்கும் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் சரிவராது என்பதை நாம் காலம் காலமாக கண்டு வருகிறோம். இதை வர்ணனையில் இருந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு கலாய்த்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “பாகிஸ்தான் அணி ஒருபோதும் மாறாது. அவர்கள் ஒருபோதும் இதற்காக கற்றுக்கொள்ள மாட்டார்கள். இதில் பல ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை நாம் பார்த்து வருகிறோம்”, என்று கலாய்த்து பேசினார்.
அவருடன் இருந்த சக வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் அவர் கூறியதற்கு, “பாகிஸ்தானில் இருந்து இதுபோன்ற ஃபீல்டிங்கை நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முடிவடையாத தொடர்கதை என்றால் அது ஃபீல்டிங் தான். அவர்கள் விளையாடுவது பள்ளிப்பருவ கிரிக்கெட் தான்”, என பதிலளித்து பேசி இருந்தார்.