இந்தியாவை நசுக்கி அப்பளம் ஆக்குவோம் பங்காளி பளீர் பேச்சு…!
50 ஓவர்க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற மே 30 தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.இதில் 10 அணிகள் தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்ற நிலையில் இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் நிலை உள்ளது.
மேலும் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஜூன் 16 தேதி ஓல்டு டிராஃபோர்டில் பலப்பரீட்சை நடத்துகின்றது. பல ஆண்டுகளாக இந்த இரு அணிகளுக்கும் போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த போட்டியானது நடக்கிறது.
மேலும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்னர் 6 முறை மோதி உள்ளன. இதில் ஒருமுறை கூட பங்காளி பாகிஸ்தான் வெற்றி பெற்றது கிடையாது.ஆனால் இந்த முறை இந்தியாவிற்கு பங்காளியான பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்கும் என முன்னாள் வீரர் மொயீன் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொயீன் கான் கூறுகையில் தற்போது உள்ள பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடிக்கக் கூடிய வல்லமையும் ஆற்றலையும் பெற்றுள்ளது.மேலும் அந்த அணியில் பலதரப்பட்ட திறமையுள்ள வீரர்கள் உள்ளனர். கேப்டன் சர்பிராஸ் அகமது வீரர்களுடன் ஒன்றிணைந்து வழி நடத்தி வருகிறார்.
மேலும் பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு வருடத்திற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் ஜூன் மாதம் சீதோஷ்ணநிலையானது எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும்.மேலும் இது மிக சுவாரஸ்யமான ஒரு உலகக்கோப்பை தொடராக தான் இருக்கும்.மேலும் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்பதில் யார் உறுதியாக இருக்கிறார்களோ இல்லையோ நான் உறுதியாக இருக்கிறேன்.
பாகிஸ்தான் வீரர்கள் சிறந்த உத்வேகத்துடன் தற்போது உள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடருக்குப்பின்னர் உலகக்கோப்பையில் களம் இறங்குவது தான் இதன் சிறப்பான அம்சம்.கடந்த சில வருடங்களாக இங்கிலாந்தில் வெற்றி பெற்ற அணிகளில் ஒன்று பாகிஸ்தான் என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.