பாகிஸ்தான் – வங்கதேச போட்டி: குறுக்கே வந்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!
இதுவரை எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் தோல்வியை சந்தித்து, அரையிறுதி போட்டிக்கான ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது.

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன.
அதன்படி, ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிக்கான டாஸ், மைதானம் ஈரமாக இருந்ததால் தாமதமானது.
இந்த தொடரில் இந்த அணிகளுக்கு இதுவே கடைசி போட்டி என்பதால், இதுவரை ஒரு வெற்றியைக் கூட சந்திக்காத இரு அணிகளும், இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், மழையே இந்த போட்டியில் வென்று விடும் தருவாயில் உள்ளது. இதுவரை எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து, அரையிறுதி போட்டிக்கான ரேஸில் இருந்து வெளியேறியுள்ளன.
முன்னதாக, கடந்த 25ம் தேதி அன்று இதே (ராவல்பிண்டி) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான குரூப் பி போட்டி தொடர் மழை காரணமாக, டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது, இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த போட்டியும் ஒருவேளை மழை காரணமாக கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்த போட்டியில் இரு அணியும் ஆறுதல் வெற்றியைப் பெறக்கூடும் என்று தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025