இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 349 ரன்கள் இலக்காக வைத்த பாகிஸ்தான்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதி வருகிறது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபார்கார் ஜமான், இமாம் உல்-ஹக் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக இருவரும் விளையாடினர்.
இவர்களின் விக்கெட்டை பறிக்க இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் போராடினர். அப்போது மோயீன் அலி தனது பந்து வீச்சில் ஃபார்கார் ஜமானை 36 ரன்னில் அவுட் ஆக்கினார்.
பின்னர் களமிறங்கிய பாபர் ஆசாம் , இமாம் உடன் கூட்டணியில் இணைத்தார்.சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய இவர்களை மீண்டும் மோயீன் அலி இமாம் உல்-ஹக் 44 ரன்னில் அவுட் செய்தார்.
அதன் பின்னர் பாபர் ஆசாம் 63 ரன்னிலும், முகமது ஹபீஸ் 84 ரன்னிலும், சர்பாராஸ் அஹ்மத் 55 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து348 ரன்கள் குவித்தனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 84 ரன் அடுத்தார். இங்கிலாந்து அணி பந்து வீச்சில் மோயீன் அலி ,கிறிஸ் வோக்ஸ் தலா3 விக்கெட்டையும் , மார்க் வூட் 2 விக்கெட்டையும் பறித்தனர்.இங்கிலாந்து அணி 349 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்!
February 13, 2025![tvk vijay o panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-o-panneerselvam.webp)
“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!
February 13, 2025![ops -sengottaiyen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ops-sengottaiyen.webp)
விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!
February 13, 2025![udhayanidhi stalin and kamal haasan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/udhayanidhi-stalin-and-kamal-haasan.webp)