ஆப்கானிஸ்தானை பந்தாடி இமாலய வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி..!

Published by
அகில் R

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி இன்று  நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்  ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி  முதலில் பந்து வீசியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க  ஆட்டக்க்கரான ஷாஜாய்ப் கான் அதிரடியாக விளையாடி 106 ரன்களை குவித்தார். அவருடன் மறுனையில் விளையாடிய வீரர்கள் சிறப்பான கூட்டணி அமையாததால் சொரப்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.  அதன் பின் முகமது ரியாசுல்லா, ஷாஜாய்ப் கானுடன்  கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயரத்தினர்.

INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!

இறுதியில் 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து 290 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டினால் வெற்றி என்ற முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணி  களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி திணறியது.

அந்த அணியில் நுமன் ஷா 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக உபைத் ஷா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரரும் நிலைத்து நின்று நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Published by
அகில் R

Recent Posts

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

21 minutes ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

43 minutes ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

1 hour ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

2 hours ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

2 hours ago

தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!

தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…

3 hours ago