ஆப்கானிஸ்தானை பந்தாடி இமாலய வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி..!

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்க்கரான ஷாஜாய்ப் கான் அதிரடியாக விளையாடி 106 ரன்களை குவித்தார். அவருடன் மறுனையில் விளையாடிய வீரர்கள் சிறப்பான கூட்டணி அமையாததால் சொரப்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அதன் பின் முகமது ரியாசுல்லா, ஷாஜாய்ப் கானுடன் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயரத்தினர்.
INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!
இறுதியில் 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து 290 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டினால் வெற்றி என்ற முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி திணறியது.
அந்த அணியில் நுமன் ஷா 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக உபைத் ஷா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரரும் நிலைத்து நின்று நிற்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025