உலககோப்பையில் ஐந்தாவது முறையாக குறைந்த ரன்னில் தோற்ற பாகிஸ்தான் அணி
நேற்று நடந்த இரண்டாவது உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர் முடிவில் 105 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் குறைந்தபட்ச ரன்னில் தோற்றது இதுவே 5 முறையாகும்.
1992-ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 74 ரன்னில் தோல்வியை தழுவியது.
1999-ம் ஆஸ்திரேலியா அணியுடன் 132 ரன்னில் தோல்வியை தழுவியது.
2003-ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 134 ரன்னில் தோல்வியை தழுவியது.
2007-ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 132 ரன்னில் தோல்வியை தழுவியது.
2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 105 ரன்னில் தோல்வியை தழுவியது.