ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்கு 138 இலக்கு வைத்த பாகிஸ்தான்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான்(15), பாபர் ஆசம்(32) ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற முகமது ஹரீஸ்(8), ஷான் மசூத்(38) சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அதன் பின்னர் இப்திகார் அகமது(0), ஷதாப் கான்(20),முகமது நவாஸ்(5), முகமது வாசிம்($) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் சாம் கர்ரன் 3 விக்கெட்களையும் , கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டையும் ,பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .
சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியையும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர்(w/c), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்
பாகிஸ்தான் அணி: பாபர் அசாம்(c), முகமது ரிஸ்வான்(w), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…