AusvsPakSemi-Final 2 : 179 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து முதலில் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாமில் ஹுசைன் 17, ஷாஜாய்ப் கான் 4 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள்.
Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..!
அதன்பின் களத்திற்கு வந்த அசான் அவாய்ஸ் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். சாத் பெய்க் 3, அகமது ஹசன் 4, ஹரூன் அர்ஷத் 8, ஆகியோர் ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். பின் களமிறங்கிய அராபத் மின்ஹாஸ் நிதானமாக களத்தில் நின்று அணிக்கு தேவையான ரன்களை குவிக்க தொடங்கினார்.
61 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அராபத் மின்ஹாஸ் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி திணறியது. இறுதியாக 48.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அடுத்ததாக 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது.
அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அசான் அவாய்ஸ் 52 ரன்களும், அராபத் மின்ஹாஸ் 52 ரன்கள் எடுத்துள்ளனர். அதைப்போல, ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்களையும், டாம் காம்ப்பெல், ராஃப் மேக்மில்லன், காலம் விட்லர், மஹ்லி பியர்ட்மேன் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள்.