உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!

Published by
murugan

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் இழந்த பாகிஸ்தான் முதலில் பந்துவீசுகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த போது இப்திகார் அகமது இவர்களின் பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார். இதன் காரணமாக டேவிட் மலன் 39 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் ஜோ ரூட் களமிறங்க அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்த ஜோ ரூட் உடன் கூட்டணி அமைத்தார். இவர்களின் விக்கெட்டைப் பறிக்க பாகிஸ்தான் அணி திணறி வந்தது. இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 76 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 84 ரன்னில்  பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 132 ரன்கள் சேர்க்கப்பட்டது.

மறுபிறும் விளையாடி வந்த ஜோ ரூட் அடுத்து இரண்டு ஓவரில் அரைசதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த  ஹாரி புரூக் வந்த வேகத்தில் அதிரடி காட்டி 30 ரன் எடுத்து வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் விளையாடிய கேப்டன்  ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 337 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டையும், முகமது வாசிம், ஷாஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.

இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டியிலிருந்து முற்றிலும் வெளியேறியுள்ளது. இருப்பினும், மறுபுறம் விளையாடி வரும் பாகிஸ்தானும் தற்போது வெளியேறிவிட்டது. பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் முதலில் இறங்கிய இங்கிலாந்தை கீழ்கண்ட ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்தி அந்த இலக்கை கீழ்கண்ட ஓவருக்குள் பாகிஸ்தான் அடிக்க வேண்டும்.

  • இங்கிலாந்தின் ஸ்கோர்  20 ஆக இருந்தால் அதை 1.3 ஓவரில் எட்ட வேண்டும்.
  • இங்கிலாந்தின் ஸ்கோர் 50 ஆக இருந்தால் அதை  2 ஓவரில் எட்ட வேண்டும்.
  • இங்கிலாந்தின் ஸ்கோர் 100 ஆக இருந்தால் அதை 2.5 ஓவரில் எட்ட வேண்டும்.
  • இங்கிலாந்தின் ஸ்கோர் 200- ஆக இருந்தால் அதை  4.3 ஓவரில் எட்ட வேண்டும்.
  • இங்கிலாந்தின் ஸ்கோர் 300- ஆக இருந்தால் அதை  6.1 ஓவரில் இலக்கை எட்ட வேண்டும்.

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்களை 6.1 ஓவரில் அடிப்பது என்பது மிக மிக கடினம் என்பதால் நடப்பு உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.

Published by
murugan
Tags: #ENGvPAK

Recent Posts

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்..15 பேர் பலி! தாலிபான் எச்சரிக்கை!!!

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…

17 minutes ago

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

57 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

60 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

3 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

4 hours ago