பாகிஸ்தான் கண்டிப்பா ஃபைனல் விளையாடுவாங்க ..இதுதான் காரணம் ! – ஷாஹித் அப்ரிடி

Shahid Afridi

ஷாஹித் அப்ரிடி : டி20 உலகக்கோப்பையின் தூதரில் ஒருவரான ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் அணி தான் இந்த உலகக்கோப்பையில் எனக்கு பிடித்தமான அணி என்றும் அவர்கள் இறுதி போட்டிக்கும் செல்வார்கள் என சில காரணங்களையும் கூறி இருக்கிறார்.

வரவிற்கும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில் இதற்கான பயிற்சிகளிலும் ஈடு பட்டு வருகின்றனர். மேலும், டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக, பயிற்சி போட்டிகளும் நடைபெற உள்ளது.

அதற்கான பயிற்சியில் முழு முனைப்போடு அனைத்து அணிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதரக ஜமாய்கா நாட்டை சேர்ந்த நட்சத்திர தடகள வீரரான உசைன் போல்ட் ஐசிசியால் அறிவிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் யுவராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லும் தூதராக ஐசிசியால் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இன்றைய நாளில் ஐசிசியால் அதிகாரப்பூர்வமாக ஷாஹித் அப்ரிடியும் தூதராக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஐசிசி அவரிடம் நேர்காணல் ஒன்றை நடத்தினார்கள். அந்த நேர்காணலில், நடைபெற போகும் இந்த டி20 தொடரில் எந்த அணி உங்களுக்கு பிடித்தமான அணியாக இருக்கிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார். அவர் பேசுகையில், “என்னை பொறுத்த வரை இந்த டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் கண்டிப்பாக பாகிஸ்தான் அணி விளையாடுவார்கள் என்று தான் கூறுவேன்.

அதற்கு மிக முக்கிய காரணம் இந்த போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெறுகிறது. இதனால் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்றது போல விளையாட பாகிஸ்தான் அணியால் முடியும். நீங்கள் எடுத்து பாருங்கள் ஸ்பின் தான் போட்டியை மாற்ற போகிறது என்றால் பாகிஸ்தான் அணியில் அட்டகாசமான ஸ்பின்னர்கள் உள்ளனர். வேகபந்து தான் போட்டியை மாற்ற போகிறது என்றால் பாகிஸ்தான் அணியில் அச்சுறுத்தும் பவுலர்களும் இருக்கின்றனர்.

அதே போல தான் பேட்டிங்கும், அதிரடியாக பேட்டிங் விளையாடவும் பாகிஸ்தான் அணியில் ஆட்கள் உள்ளனர். எனக்கு உறுத்தலாக இருப்பது ஒன்று மட்டும் தான் மிடில் ஓவர்களான 7 முதல் 15 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் ஸ்ட்ரைக் ரேட் சற்று தோய்வாகவே இருக்கிறது. அவர்கள் அதை மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் அணி தான் எனக்கு பிடித்த அணியாக இந்த டி20 தொடரில் உள்ளது”, என்று கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்