ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.இருப்பினும் டேவிட் மலன் 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் ஜோ ரூட் களமிறங்க ஜானி பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் கூட்டணி அமைத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 76 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 132 ரன்கள் சேர்க்கப்பட்டது.
மறுபுறம் விளையாடி வந்த ஜோ ரூட் அடுத்து இரண்டு ஓவரில் அரைசதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் 30, கேப்டன் ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 337 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டையும், முகமது வாசிம், ஷாஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-பந்திலே அப்துல்லா ஷபீக் டக் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். இருப்பினும் 3-வது ஓவரில் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 1 ரன் எடுத்து பென் ஸ்டோக்கிடம் கேட்சை கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 10 ரன்னில் 2 விக்கெட்டை பறிகொடுத்தது.
அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் களத்தில் இருந்த கேப்டன் பாபர் அசாம் உடன் இணைந்து சற்று ரன்களை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்தஇருவரும் அரைசதம் அடிக்காமல் அடுத்தடுத்த சில ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்படி முகமது ரிஸ்வான் 36 ரன்களிலும் , கேப்டன் பாபர் அசாம் 38 ரன்களிலும் வெளியேறினர்.
உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!
மத்தியில் இறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக அரைசதம் பூர்த்தி செய்து 51 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசியில் இறங்கிய ஷதாப் கான் 4, இப்திகார் அகமது 3 ரன்கள் எடுக்க இறுதியாக பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்டையும், கஸ் அட்கின்சன், மொயின் அலி, அடில் ரஷித் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…