அமெரிக்கா வெற்றியின் மூலம் வெளியேறும் பாகிஸ்தான்? புள்ளிப்பட்டியல், விவரங்கள் இதோ!!

Pakistan Team

டி20I: 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில்,  ‘A’  பிரிவில் நடைபெறும் இன்றைய போட்டியால் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி நிலவி உள்ளது.

நடப்பாண்டில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகாணங்களில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தற்போது லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. இதில் A பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான இந்தியா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிவருகிறது.

இதில் ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது அடுத்த அணியாக எந்த அணி முன்னேற போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த பிரிவில் 2-வது அணியாக முன்னேறுவதற்கு அமெரிக்கா அணிக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

இன்று நடக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்கா அணி, அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஒருவேளை இந்த போட்டியானது மழையால் நடைபெறுமால் போனாலோ இல்லை இந்த போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறி விடும் என்பது தான் தரவுகள் கூறுகிறது.

பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி, அதில் 1 வெற்றியை மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து வருகின்றனர். இதனால், அமெரிக்கா அணி இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே, இந்திய அணியை தவிர்த்து அந்த பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையும், ஒருவேளை அமெரிக்கா அணி இன்றைய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி விட்டால் கனடா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal