தோணி மீது பாசத்தை பொழிந்த பாகிஸ்தான் வீரர்..!திடீர்னு என்ன பாசம்..!!

Default Image

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன.

Image result for DHONI VS PAKISTAN

தனது முதல் லீக்கில் ஹாங்காங்குடன் 18-ந் தேதி மோதும் இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே 19-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Image result for DHONI VS PAKISTAN

இந்நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமாகிய மகேந்திர சிங் தோனியை, பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார் 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியானது கிரிக்கெட் ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடக்க நாளான இன்று முதல் லீக்கில் இலங்கை- வங்காளதேச அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்