ஜிம்பாப்வேவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி, 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாக். அணி தோல்வி குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் பாக் அணி கேப்டன் வாசிம் அக்ரம் தோல்வி குறித்து தான் அதிர்ச்சியுற்றதாக ட்வீட் செய்திருந்தார்.
ஷாஹித் அப்ரிடி கூறுகையில், இந்த தோல்வி குறித்து நான் மனம் கலங்க வில்லை, நீங்கள் ஆட்டத்தை பார்த்திருந்தால் அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால் ஜிம்பாப்வே அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
சோயப் அக்தர், பாக் அணி கேப்டன் பாபர் அசாமை விமர்சித்துள்ளார். நமது அணிக்கு கேப்டன் சரியில்லை, பாபர் அசாம் தலைமையில் நிறைய குறைகள் இருக்கிறது. நீங்கள் உலகக்கோப்பை மாதிரி பெரிய தொடருக்கு வெறுமென சென்று, எதிரணியினர் உங்களுக்கு வெற்றியை தூக்கி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது என அக்தர் மேலும் கூறியுள்ளார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…