பங்களாதேஷ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் !
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , பங்களாதேஷ் அணியும் மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்துதடுமாறி விளையாடிய ஃபக்கர் ஜமான் 31 பந்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பாபர் ஆசாம் களமிறங்க இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணியில் இணைந்தனர். இருவருமே தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த இருவருமே அரைசத்தை நிறைவு செய்தனர்.
இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி திணறி வந்தது. இந்நிலையில் 32 ஓவரில் பாபர் ஆசாம் 96 ரன்களுடன் வெளியேறினர்.அதில் 11 பவுண்டரி விளாசினார். நிதானமாக விளையாடி இமாம்-உல்-ஹக் சதம் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய முகமது ஹபீஸ் 27 , ஹரிஸ் சோஹைல் 6 , இமாத் வாசிம் 43 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தனர்.
பங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டையும் , முகமது சைபுதீன் தலா 3 விக்கெட்டையும் பறித்தனர்.இந்நிலையில் 316 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் , சௌமிய சர்க்கார் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே தடுமாறிய தமீம் இக்பால் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர்.பின்னர் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினர்.ஷாகிப் அல் ஹசன் , சௌமிய சர்க்கார் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதன் மூலம் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய சௌமிய சர்க்கார் 22 ரன்னில் அவுட் ஆனார் .
பின்னர் நிதானமாக விளையாடி ஷாகிப் அல் ஹசன் அரைசதம் நிறைவு செய்தார்.அரைசதம் அடித்த சிறிது நேரத்திலே ஷாகிப் அல் ஹசன் 64 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பிறகு மத்தியில் களமிறங்கிய லிட்டன் தாஸ் 32 , மஹ்மதுல்லா 29 ரன்களுடன் வெளியேறினர்.
இறுதியாக பங்களாதேஷ் அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி 6 விக்கெட்டை பறித்தார்.