பாகிஸ்தான் அணி 19 ஓவர் முடிவில் 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ஆப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் விளையது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷாஜாத் 8, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் டக் அவுட் ஆனார்கள். அடுத்து இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்கர் ஆப்கான் தலா 10 ரன்கள் எடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் 64 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நஜிபுல்லா சத்ரன் நிதானமாக விளையாடி 22 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் மத்தியில் இறங்கிய கேப்டன் முகமது நபி , குல்பாடின் நைப் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இறுதியாக ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை களத்தில் முகமது நபி , குல்பாடின் நைப் தலா 35* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர். பாகிஸ்தான் அண சார்பாக பந்துவீச்சாளர்கள் இமாத் வாசிம் 2 , ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷதாப் கான் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
20 ஓவரில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முஹமது ரிஷ்வான் 8 ரன்னில் வெளியேற, இன்னோர் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பாபர் அசாம் நிதானமாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார். பாஹர் சமாம் 30 ரன்களும், முகம்மது ஹமீஸ் 10 ரன்களும், சோஹிப் மாலிக் 19 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆசிப் அலி வெறும் 7 பந்தில் 25 ரன்கள் விளாசி (அதில் 4 சிக்ஸர்கள்) இறுதியாக 148 என்கிற இலக்கை 19 ஓவர் முடிவிலேயே எட்டி அணியை திரில் வெற்றி பெற வைத்துவிட்டார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…