பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அபுதாபியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆனது தெரியாமல் விளையாண்ட அசார் அலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அபுதாபி நகரில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 282 ரன்களும் ஆஸ்திரேலியா 145 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 400 ரன்கள் எடுத்து தனது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
38 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்சில் மூன்றாவது நபராக களமிறங்கிய அசார் அலி இன்றையை சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளார்.
ஆஸ்திரேலிய பவுலர் வீசிய பந்தை அசார் அலி ஸ்லிப் திசையில் தூக்கி அடித்தார். இந்த பந்து பீல்டர்களை ஏமாற்றி பந்து தேர்ட் மேன் பகுதிக்கு பறந்து சென்றது. பவுண்டரி எல்லையை நோக்கி வேகமாக சென்ற பந்து எல்லையை தொடும் முன்னரே சிறிது தூரத்தில் துரதிஷ்டவசமாக நின்றுவிட்டது. ஆனால், பந்து பவுண்டரியை தொட்டு விட்டதாக நினைத்த பாகிஸ்தான் வீரர் அசார் அலியும், எதிர்முனையில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஆசாத் சபீக்கும் களத்தின் நடுவில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…