பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.
ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி வரை கடுமையாக போராடியது. அப்போது 19வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கன் வீரர் பரீத் அகமது வீசிய 4வது பந்தில் சிக்ஸர் அடித்து விடுவார்.
அதற்கு அடுத்த பந்தில் அவுட் ஆகி விடுவார். அந்த சமயம் பரீத் அகமது எதோ சொல்ல , கோபமடைந்த ஆசிப் அலி பேட்டால் பரீத் அகமதை தாக்க முற்பட்டு விடுவார். மற்ற சக வீரர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி ஆசிப் அலியை பெவிலியன் செல்ல அனுப்பி விடுவர்.
இறுதியில் 20 ஓவரில் 2 சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. இதனால் மைதானத்தில் கடுப்பான ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகளை அடித்து உடைத்துவிட்டனர். இதனால் நேற்றைய ஆட்டத்தில் மைதானமே ரணகளமாக மாற்றிவிட்டது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…