PAK vs NZ : அதிரடி காட்டுமா நியூசிலாந்து… டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச முடிவு.!
சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய வைத்து சேஸிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் முதல் போட்டியுடன் இன்று தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபி ‘மினி உலகக் கோப்பை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது. இதில், எட்டு அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றனர்.
ஒருநாள் போட்டி மாதிரியே 50 ஓவர்களில் நடைபெறும் முதல் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன.
சமீபத்தில், முடிவடைந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் நடந்த ஒருநாள் முத்தரப்பு தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில், தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இன்று நியூசிலாந்திடம் போட்டியை வெல்லும் முனைப்புடன் விளையாடும்.
தற்பொழுது, அணி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இப்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
இரு அணிகள் சார்பாக விளையாட விருக்கும் வீர்களின் பட்டியல்…
பாகிஸ்தான் அணி:
கேப்டன் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியில் ஃபகார் ஜமான், பாபர் ஆசம், சவுத் ஷகீல், சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி:
கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அணியில் டெவன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில்லியம் ஓரூர்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.