பாகிஸ்தான் மிஸ்டர் பீன், ஜிம்பாப்வே அதிபர் ட்வீட்டுக்கு பாக் பிரதமர் பதில்.!

Default Image

நேற்று டி-20 உலகக்கோப்பையில் பாக்-ஜிம்பாப்வே போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்று பாகிஸ்தானை அதிர வைத்தது.

இந்த போட்டிக்கு பின், 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் சண்டையிட்டு வருகின்றனர்.

பாக்-ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னதாகவே ஜிம்பாப்வே ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில் போலியான மிஸ்டர் பீன் ஐ எங்கள் நாட்டுக்கு அனுப்பியதை மறக்க மாட்டோம், பாக்-ஜிம்பாப்வே போட்டியின்போது மழை வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த காமெடியன் மொஹம்மது ஆசிப் பார்ப்பதற்கு அப்படியே “மிஸ்டர் பீன்(Mr. BEAN)” ரோவன் அட்கின்சன் போலவே இருப்பார். அவர் 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே வில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மிஸ்டர் பீன் போல நடித்து அதற்காக பணம் பெற்றுக்கொண்டார். அது குறித்த புகைப்படமும் விடியோவும் இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

இந்த போலி மிஸ்டர் பீன் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் சண்டையிட்டு வந்த நிலையில் ஜிம்பாப்வே அதிபர் மற்றும் பாக் பிரதமர் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஜிம்பாப்வே வெற்றி பெற்ற பின் அந்நாட்டு அதிபர் எம்மர்சன் நங்கக்வா தனது ட்விட்டரில் ‘என்ன ஒரு அருமையான வெற்றி! வாழ்த்துகள் செவ்ரான்ஸ்’ அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீன் ஐ அனுப்புங்கள் #PakvsZim என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாக் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ட்விட்டரில் ‘எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உண்மையான கிரிக்கெட் ஸ்பிரிட்(திறன்) உள்ளது மற்றும் நாங்கள் விரைவில் எழுந்து வருவோம். வாழ்த்துகள் அதிபர் உங்கள் அணி இன்று சிறப்பாக விளையாடியது’ என்று பதில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்