பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களும் இனி பிரியாணி சாப்பிட கூடாது என்ற உணவு கட்டுபாட்டை மிஷ்பா உல் ஹக் விதித்து உள்ளார்.
உலகக்கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் உடற்தகுதி பற்றிய சில கருத்துகள் எழுந்தன.இதையடுத்து உணவு கட்டுப்பாடு கொண்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.இனி வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு முறை தேசிய அணிகளுக்கும் பொருந்தும் என மிஷ்பா உல் ஹக் கூறிஉள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது இல்லை எனவும் அவர்கள் அதிகமாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் ஜங்க் ஃபுட்டை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் என மிஷ்பா உல் ஹக் கூறினார்.
உடல் தகுதியாக இருக்க உணவு முறையை கடைபிடிக்க வேண்டும் என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. உணவுக் கட்டுப்பாடு குறித்து ஒரு லாக் புக் கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. அதை பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…