செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் அதாவது தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கின் போது தொடக்கத்தில் இந்திய அணியின் பக்கமே போட்டியானது இருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய மார்கோ ஜான்சன் இந்திய அணியின் பவுலர்களை திணறடித்தார். இனி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என எதிர்பார்த்த […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற வகையில், பல தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, இந்த வீரர்களை அந்த அணிகள் ஏலத்தில் எடுக்கப் போகிறது அந்த அணிக்கு இந்த வீரர் தான் அடுத்த ஆண்டு கேப்டன் என்கிற வகையில் தகவல்கள் வெளியாகிக் கொண்டு உள்ளது. அந்த வரிசையில், தற்போது கொல்கத்தா அணிக்கு அடுத்த ஆண்டு ரிங்கு சிங் கேப்டனாக செயல்பட அணி நிர்வாகம் […]
செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், 2-வது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், அதே போல இந்த போட்டியிலும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்களால் தான் அவரது வாய்ப்புகளைப் பெரிதும் பாதித்ததாகக் குற்றம் சாட்டி வெளிப்படையாக அவர்களுடைய பெயரையும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சஞ்சுவின் முக்கியமான கிரிக்கெட் காலத்தில் அவசரமான தீர்மானங்களால் […]
ஹோபார்ட் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிக்பாஷ் தொடரில் இன்று ஹோபார்ட் அணியும், அடிலெய்டு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அடிலெய்டு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய ஹோபார்ட் அணி முதலில் ஒரு விக்கெட்டை இழந்தாலும் அதன்பிறகு அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்தியது. அதிலும், தொடக்க வீராங்கனையான ‘லீ’ அதிரடியின் உச்சத்தில் விளையாடினார். அவருடன் இணைந்து நிக்கோலா கேரியும் சிக்ஸர் பவுண்டரி என விளாசினார். இதனால், […]
கொல்கத்தா : நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயரை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் விளையாடத் தக்க வைக்கவில்லை. சிறப்பாக விளையாடியபோதும் அவரை அணி நிர்வாகம் தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் என்ன அவரை பல அணிகள் ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போடும். அப்படி 5 அணிகள் […]
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் 3 வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் நிலைப்பாடு : கடந்த 2 போட்டிகளில் ஆளுக்கு ஒரு போட்டிகளைக் கைப்பற்றி 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்து வருகின்றனர். இந்த டி20 தொடரில் 4 போட்டிகள் இருப்பதால், இந்தப் போட்டியை கண்டிப்பாக இரு அணிகளும் வென்றே ஆக […]
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி முடிந்த பிறகு அவர் இதனை வெளிப்படுத்தினார். இந்த ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தானின் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. தொடரில் முகமது நபி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். விருதை வென்ற பிறகு பேசிய முகமது நபி ” […]
சிட்னி : ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான பிக் பாஷ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்காக நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்று நடைபெற்ற 24-வது போட்டியில் பெர்த் அணியும், சிட்னி அணியும் மோதியது. இரண்டு அணியும் நட்சத்திர அணி என்பதால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கான போட்டியாகவே இது அமைந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய பெர்த் அணி தொடக்கத்தில் […]
பார்படாஸ் : இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் நேற்று 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து அணியின் கேப்டனான பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் பெற்று தொடரிலும் 2-0 என முன்னிலை வகித்து வருகிறது. இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது, சூழல் பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியின் பந்தை இறங்கி […]
மும்பை : அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான மேகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நட்சத்திர வீர கே.எல். ராகுலும் ஒருவர். […]
சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள். போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஹார்மோன் மாற்ற அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது வாழ்க்கையில் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த சமயம் அவர் புகைப்படங்கள் வெளியீட்டு வந்தாலும் பெரிய அளவில் இது சஞ்சய் பங்காரின் மகன் என்று தெரியவில்லை என்பதால் இந்த தகவல் வைரலாகவில்லை. இதனையடுத்து, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிறகு இது சஞ்சய் பங்கரின் […]
ஜார்ஜ் பார்க் : இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சற்றும் எதிர்பாராத இந்திய அணி தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சால் தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் இந்த முறை 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, […]
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு முன் காட்ட விருப்பப்படுவது இல்லை. அப்படி தான் இந்திய வீரர் விராட் கோலியும் கூட. 2017 இல் திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா மற்றும் விராட் தம்பதியினருக்கு 2021 இல் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே விராட் கோலி தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் தனிப்பட்ட விஷயமாக வைத்து வருகிறார். குழந்தையின் முகத்தை […]
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்று வருகிறது. இந்த தொடரில், 2வது டி20 போட்டியானது இன்று செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த முதல் போட்டியில், இந்திய அணியின் வீரரான சஞ்சு […]
மும்பை : கடந்த நவம்பர்-5ம் தேதி தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவரது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், அடுத்ததாக அவர் நவ.22-ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளார். அதற்கு இன்னும் 15 நாட்களுக்கு மேல் இருப்பதால், இதற்கிடையில் அவர் தனக்குக் கிடைத்த ஓய்வை குடும்பத்துடன் களித்துக் கொண்டு வருகிறார். இதன் விளைவாக நேற்று விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ஒரு தனியார் […]
டர்பன் : இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியானது நேற்று டர்பனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா அணி. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. வழக்கம் போல சேட்டன் சஞ்சு சாம்சனும, இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். தொடக்கத்தை அதிரடியாக அமைத்த சாம்சனுக்கு பக்கபலமாக […]
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், […]
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காகத் தனது பெயரை ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார். 42 வயதான ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் […]